ஐ.நா தீர்மானம் தொடர்பில் இலங்கை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை! பாலித கொஹன அறிவுரை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பிரேரணை குறித்து தூக்கிப் பிடிக்கத் தேவையில்லையென ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 70 இற்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் அந்தப் பிரேரணைகள் எந்தவொன்றையும் ஒரு சதத்துக்கும் கருத்தில் கொள்ளவில்லை.

இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பிரேரணை குறித்து தூக்கிப் பிடிக்கத் தேவையில்லை என்றார்.