சர்வதேசத்திடம் இருந்து மகிந்த மைத்திரியை காப்பாற்றும் இலங்கையின் முக்கிய பிரபலம்!

Report Print Dias Dias in அரசியல்

ஐ.நா மனித உரிமைகள் கூட்ட தொடரில் கலந்து கொண்டுள்ள பெங்களூர் பல்கலைகழகத்தின் பேராசிரியர் போல்நீயுமனிடம் லங்காசிறி விசேட செவ்வியொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் பேராசிரியரிடம் எமது பிராந்திய செய்தியாளர் தற்போதைய சூழ்நிலையில் மனித உரிமைகள் சபையில் இரண்டு வருட கால நீடிப்பு இலங்கைக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் உங்களது பார்வை எப்படி இருக்கின்றது என கேள்வியெழுப்பியிருந்தார்.

குறித்த கேள்விக்கு பெங்களூர் பல்பலைகழகத்தின் பேராசிரியர் போல்நீயுமன் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது ஐ.நா சபையினுடைய உயர்ஸ்தானிகர் இலங்கையை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றால் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கியாக வேண்டும் என கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு கால அவகாசம் வழங்குவது அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல இருப்பினும் இந்த நாடுகள் இலங்கையிடம் கோரிக்கையையே முன்வைத்துள்ளது.

மேலும் இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும், மகிந்த ராஜபக்ஸவுக்கும் எவ்விதமான உடன்பாடுகளும் கிடையாது. இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பிரேரணையை அமுல்ப்படுத்த தயாரான நிலையில் உள்ளார்.

ஐ.நா சபை அழுத்தங்களை கொடுப்பதில் எவ்விதமான பலனும் கிடையாது. ஐ.நா சபையில் உள்ள நாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இந்த நாடுகள் அழுத்தங்களை கொடுக்காத சந்தர்ப்பத்தில் இலங்கை இலகுவாக தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் இவ்வாறு கால அவகாசம் கொடுப்பதிலும் பார்க்க ஐ.நா சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நேரடியாக ஆஜர்படுத்தியிருந்தால் முறையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.