சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம்

Report Print Ajith Ajith in அரசியல்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

குறித்த நிகழ்வு சிவ்சங்கர் மேனனின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், நோர்வே, ரஸ்யா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.