தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத வரவு செலவு திட்டம் - இராதாகிருஷ்ணன்

Report Print Sinan in அரசியல்

வரவு செலவு திட்டமானது தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத ஒரு வரவு செலவு திட்டமாகவே காணப்படுகின்றதென விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது பல்வேறு வகையில் மக்களுக்கு நன்மை தருவதாக அமைந்தாலும், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படவில்லை என்பது தொடர்பில் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.