சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்திற்கு சவால் விடுத்துள்ள டிலான் பெரேரா

Report Print Kamel Kamel in அரசியல்
73Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சவால் விடுத்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தமை பிழையாக இருந்தால் தமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி தண்டிக்குமாறு டிலான் பெரேரா கோரியுள்ளார்.

புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். மேலும் கூறுகையில்,

தாம் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை தவறு என்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் நான்கு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் வாக்களிப்பின் போது அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது நான் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமை பிழை எனில், ஒழுக்காற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.