சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து மீள் பரிசீலனை: திலும் அமுனுகம

Report Print Kamel Kamel in அரசியல்
62Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதாக முன்னதாக சுதந்திரக்கட்சி இணங்கிய போதிலும் இறுதி நேரத்தில் தீர்மானத்தை மாற்றிக் கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் கட்சியுடன் கூட்டணி பேணுவது தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் செயற்பட்ட விதத்தைப் பார்க்கும் போது அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பிக்கை கொள்ள முடியாத ஓர் தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கோ பிரச்சினையில் சிக்கிக் கொள்ளவோ நாம் விரும்பவில்லை என திலும் அமுனுகம கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.