எதிர்க்கட்சிக் கூட்டணி ஐ.தே.கட்சிக்கு சவால் அல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கூட்டணி அமைத்தாலும் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த கூட்டணி பெரிய சவால் அல்ல என அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் அஜித் பீ. பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஆளும் கட்சியுடன் இணைந்துள்ளனர். மேலும் சிலர் இணைய உள்ளனர்.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்த இரண்டு அணிகள் இணைந்துள்ளதால், அது ஐக்கிய தேசியக் கட்சி சவாலாக இருக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Latest Offers