நாடக எழுத்தாளராக மாறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வந்தது ஒரு நாடகம் எனவும் அந்த நாடகத்தின் பிரதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுதியது எனவும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடக பிரதிக்கு நாடாளுமன்றத்தில் நடித்தனர்.

ரணில் விக்ரமசிங்கவின் நாடக பிரதி காரணமாக ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை அவர்கள் தோற்கடிக்கவில்லை எனவும் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers