சிறிசேன என்னை ஒதுக்கி வைத்துள்ளார்! சந்திரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்
286Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் அந்த கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனால், கட்சியில் நடக்கும் விடயங்கள் தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

திருடர்கள், கொலையாள் மற்றும் மோசமான வேலைகளுக்கு எதிராக செயற்படுவதால், தன்னை கட்சிப் பணிகளில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர் என தெரிவித்துள்ள சந்திரிக்கா, தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி! சந்திரிக்காவின் புதிய எச்சரிக்கை