மைத்திரிக்கு எதிராக ரணில் நடத்திய பதில் தாக்குதல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒக்டோபர் அரசியல் நெருக்கடியின் பின்னர் இரண்டாவது முறையாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர், மைத்திரி விக்ரமசிங்கவையும் அருகில் வைத்துக்கொண்டு ஜனாதிபதி பேசிய விடயங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் எந்த தயார் நிலையிலும் அரசாங்கம் இருக்கவில்லை.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டனர் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers