மைத்திரிக்கும் கென்யா ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

கென்யாவின் நைரேபி நகரில் நடைபெற ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாடா ஆகியோர் இடையில் நேற்று மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரை வெற்றிகரமாக ஒழுங்கு செய்தமை தொடர்பில் ஜனாதிபதி தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை கூடுதலான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கென்யா வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட இணப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

1970 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமான ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட இலங்கை மற்றும் கென்யா இடையில் நட்புறவான தொடர்புகள் இருந்து வருகிறது. இரண்டு பொதுநலவாயம், இந்து சமுத்திர நாடுகள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பு நாடுகள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கென்ய விஜயம் இரண்டு நாடுகளின் நெருக்கமான உறவுகளை மேலும் அதிகரிக்கும் என கென்ய ஜனாதிபதி கென்யாட்டா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.