வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்! மகிந்த விடுத்திருக்கும் வேண்டுகோள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

உள்நாட்டு விவகாரங்களிலும் நாட்டின் நீதித்துறையிலும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்கும் வகையிலான தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கக் கூடாது என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அமெரிக்கா அதிலிருந்து விலகியுள்ளது.

இவ்வாறான நிலையில், உள்நாட்டு விவகாரங்களில் – இலங்கையின் நீதித்துறையில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்கும் வகையிலான தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கக் கூடாது.

கடந்த 2015 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டதன் அடிப்படையில், மனித உரிமைகள் என்ற போர்வையில், நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள், பாதுகாப்புப் படைகளுக்கு தீங்கிழைக்கும் பல சட்டங்கள் நாடாளுமன்றத்தில் வரையப்பட்டன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் 40 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறும், இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செலயகம் ஒன்றை அமைக்குமாறும், தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் வைத்து கண்காணிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன என்றார்.

Latest Offers