நியூசிலாந்து தாக்குதல் குறித்து பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இரங்கல்

Report Print Kamel Kamel in அரசியல்

நியூசிலாந்தில் இன்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமாதான வரலாற்றைக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நியூசிலாந்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மக்கள் இவ்வாறான விடயங்களை அனுமதிக்க மாட்டார்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.