தமிழர்களின் வரலாறு உள்ளடக்கப்பட வேண்டும்! சீ.யோகேஸ்வரன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் தமிழ் மொழி அரச கரும மொழி என மாணவர்கள் உணரும் வகையில் மொழி உரிமைகள் அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி வெளியீட்டு திணைக்களம் மொழி மற்றும் சமய பாட நூல்கள் தவிர்ந்த ஏனைய பாட நூல்களை சிங்கள மொழியில் இருந்து மொழி மாற்றம் செய்வதன் காரணமாக அதிக அளவான எழுத்து பிழைகள், இலக்கணப் பிழைகள் காணப்படுகின்றன.

வரலாற்று பாட நூல்களில் இந்நாட்டின் தமிழர் வரலாறு முறையாக பிரதிபலிக்கப்படுவதில்லை. மாறாக ஒரு இனம் சார்பாகவே வரலாறு உருவாக்கப்படுகிறது. இது பிழையான விடயம்.

மேலும் தமிழ் மாணவர்களுக்கான வரலாறு தமிழ் கல்வி மான்களால் உருவாக்கப்பட வேண்டும். இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் தமிழ் மொழி அரச கரும மொழி என மாணவர்கள் உணரும் வகையில் மொழி உரிமைகள் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.