ஐ.நாவில் ஈழத்தமிழர் விடயத்தில் பிரித்தானியா கனடா நிலைப்பாட்டில் தடுமாற்றம்!

Report Print Dias Dias in அரசியல்

ஐ.நா சபையில் 47 நாடுகளும் இணைந்து வாக்களித்து இரண்டு முறைகள் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கியும் எவ்விதமான வேலைத்திட்டங்களையும் முறையாக செய்யவில்லை என பிரித்தானியா தமிழர் பேரவையின் பொதுமுகாமையாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் சுட்டி காட்டிய பல விடயங்களில் குறிப்பாக இலங்கை அரசு பொறுப்பெடுத்த 25 விடயங்களையும் நிறைவேற்ற மாட்டார்கள். அதே நேரத்தில் குறிப்பாக நீதி விசாரணைகள் நிறைவேற்ற மாட்டார்கள் என்றும் 2015ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தோம்.

இலங்கை அரசுக்கு கிடைத்த மூன்று அரை வருடத்தில் நீதி விசாரணைகளில் எவ்விதமான நடவடிக்கைகளையும் செய்யவில்லை என்பது நகைச்சுவையான விடயம்.

இருப்பினும் இந்த மூன்று அரை வருடத்தில் எவ்விதமான வேலைகளையும் செய்யாத அரசாங்கம் இனியும் செய்யப்போவதில்லை.

பொறுப்பு கூறல் என்பது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது. இவ் விடயத்தில் பிரித்தானியா ஆரம்பத்தில் இருந்து குறிபிட்டது இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உலக நாடுகளுடனும் ஐ.நா சபையுடனும் ஒத்துழைப்பை வழங்குகின்றது எனவேதான் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.