பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கு அமைய வாக்கெடுப்பு பகிஷ்கரிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தில் இணைய எதிர்பார்த்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரின் தேவைக்கு அமையவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பை பகிஷ்கரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி சார்பு கொண்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதும் நம்பிக்கையில்லை.

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறவே இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படியானவர் அதிகம் இல்லை ஓரிருவரின் சதித்திட்டம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் கூட்டணியை தடுக்க முடியாது எனவும் சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers