வரவு செலவு திட்டத்தால் அரசியலில் பரப்பரப்பான நிலைமை

Report Print Steephen Steephen in அரசியல்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் ஏனையோர் அதனை பகிஷ்கரித்த சம்பவத்தை அடுத்து அரசியலில் பரப்பரப்பான நிலைமை உருவாகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய உள்ளதை அமைச்சர் அஜித் பீ. பெரேரா நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரிய சவால் அல்ல என அவர் கூறியிருந்தார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொள்ள உள்ள கூட்டணிக்கு எதிராக சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைய உள்ளதாகவும் பேசப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்பை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை இணக்கம் எதனையும் வெளியிடவில்லை.

இவ்வாறான நிலையில், தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவிற்கு பின்னால் செல்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers