மகிந்தவையும் மைத்திரியையும் பிரிக்க முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிக்காது தவிர்த்துக் கொண்டமையானது எதிர்காலத்தில் உருவாக்கப்படும் கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மேல் மாகாண முதலமைச்சர் இருசு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடுவலையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் சதித்திட்டம் காரணமாக வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்கவில்லை. அது அரசியல் தந்திரம்.

ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் மகிந்த ராஜபக்சவும் இடையில் ஏற்பட்ட பிணக்கு தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இருவரும் ஐக்கியமாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers