ஜனாதிபதி பதவி கொள்ளையடிப்பதற்கான அனுமதிப்பத்திரம்

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியினால் மட்டுமே அதர்மமான அரசியலை ஒழித்து, தர்மாமான அரசியலை நாட்டில் உருவாக்க முடியும் என அந்த முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் குருணாகல் தொடங்கஸ்லந்த தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி பதவி என்பது கொள்ளையடிப்பதற்கான அனுமதிப்பத்திரம். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் கொள்ளையிட்டுள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கொள்ளையிட்டுள்ளார்.

இந்த நபர்களில் எவர் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் பற்றி கூற எங்களிடம் தகவல்கள் இருக்கின்றன.

அத்துடன் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களும் கொள்ளையிட்டுள்ளனர். ஜனாதிபதி பதவி மட்டுமல்ல பிரதமர் பதவியும் கொள்ளையடிப்பதற்கான அனுமதிப்பத்திரம்.

அரசியல் என்பதே கொள்ளையடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers