இலங்கையை சூறையாடும் சீனா! அமெரிக்கா குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

கடனை கொடுத்து சூறையாடும் உத்தியை இலங்கை உட்பட்ட பல நாடுகளில் சீனா மேற்கொள்வதாக அமெரிக்கா இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் ஜோசப் டன்போர்ட் இதனை செனட்டின் பாதுகாப்பு சேவை குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

70 வீத பங்குடன் 99 வருட குத்தகைக்கு இலங்கையின் ஆழமான துறைமுகப்பகுதியை சீனா பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஷ்தானில் கௌடார் துறைமுகத்தில் 10 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் நிர்மாணங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, மாலைதீவில் 1.5பில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் சீனா நிர்மாணங்களை மேற்கொள்கிறது என்றும் அமெரிக்காவின் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் ஜோசப் டன்போர்ட் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers