மட்டக்களப்பில் மிகவும் வறுமையான பெண்ணுக்கு வீடு கட்டிக் கொடுக்க அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Navoj in அரசியல்

மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் மிகவும் வறுமையான நிலையில் வாழும் முதிய பெண்மணி ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முகமாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்று கிராம உத்தியோகஸ்த்தர் இ.அச்சுதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் த.சங்கரராஜா, வடமாகாண உதைபந்தாட்ட இணைப்பாளர் பா.காந்தரூபன், ஆசிரியர் எஸ்.மங்களதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers