தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் மாபெரும் நீதிக்கான மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சகலபேதங்களையும் மறந்து ஒன்றுதிரண்டு தமது பூரண ஆதரவைத் தெரிவிக்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொத்துவில்தொகுதி அமைப்பாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு பழைய பாலத்திற்கு அருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெறவிருக்கும் மாபெரும் நீதிக்கான மக்கள் எழுர்ச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் சங்கத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களது குடும்பங்கள் தினம்தினம் செத்துக்கொண்டிருக்கிறது. அப்பா வரமாட்டாரா? என பிள்ளைகளும் கணவன் வரமாட்டாரா? என மனைவியரும் புலம்புவதை இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.அவர்களுக்கான நீதி இன்னமும் வழங்கப்படவில்லை. இலகைஅரசு தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில் மாதம் 6ஆயிரம் ருபா வழங்குகின்ற செயற்பாட்டை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்களுக்கு என்ன நடந்தது? உறவுகளை ஒப்படையுங்கள். அதற்கான நீதி என்ன? என்பதையே வருடக்கணக்கில் எதிர்பார்த்துக்காத்திருக்கிறார்கள்.

ஆனால் வெறும் 6ஆயிரம் ருபாவால் இதனை மறைக்க அல்லது மழுங்கடிக்க முனைகின்றார்கள். அதைவிடுத்து உண்மையான தாற்பரியத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம்

சொல்லவேண்டும். 19ஆம் திகதிய போராட்டம் முழுமையாக வெற்றிபெற எமது பூரண ஆதரவு. அம்பாறை மாவட்ட சகல தமிழ்மக்களும் முடிந்தவர்கள் அங்குசென்று போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் ஏனையோர் அவர்களுக்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 40 வது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமர்வின் போது இலங்கையில் யுத்தகாலங்களில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அதன் அறிக்கையினை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். இன்னமும் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது. விரைந்து நீதி பெறப்படவேண்டும்.

இத்தருணத்தில் நடைபெறவிருக்கும் இப்போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே மறத்தமிழர் என்றரீதியில் எமது பரிபூரண ஆதரவை வழங்குவோம். வாரீர் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest Offers