வெளிநாடு செல்வதற்கு ஒன்பது இராணுவ வீரர்களுக்கு தடை! இந்த நிலை எதனால் வந்தது? மகிந்த கவலை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் இன்று தண்டிக்கப்படுகின்றனர் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தளை முவன்தெனிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

பெரும் சவால்களுக்கும் பாரிய போராட்டத்தின் மத்தியிலும் 30 வருட கால யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் இன்று தண்டிக்கப்பட்டுகின்றனர்.

எமது நாட்டு இராணுவத்தினர் 9 பேருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாடுகள் குறிப்பிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி இராணுவத்தினரை நாட்டுக்குள் அனுமதிப்பதும் இல்லை. இவையனைத்தும் ஒருதலைப்பட்சமான செயற்பாடாகும்.

எவ்வாறாயினும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும். இன்று மொத்த சனத்தொகையில் குறிப்பிட்ட வீதத்தினர் உயிரிழந்திருப்பார்கள் என்றார்.

Latest Offers