மாகாண சபையை நீக்கவிட்டு ஜனாதிபதி முறை நீக்குவது குறித்து சிந்தியுங்கள்! மெதகம தம்மானந்த தேரர் அறிவுரை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மாகாண சபையைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு மட்டுமே முடியும். இதனால், மாகாண சபையை நீக்கி விட்டே ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அஸ்கிரிய பீட பிரதம செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

இலங்கையில் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு முன்னர், மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். மாகாண சபை இன்றி இந்த நாட்டை நிர்வகிக்க முடியும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த பல மாதங்களாக மாகாண சபைகள் செயற்படுவதில்லை. இருந்தாலும், நாட்டின் சகல நடவடிக்கைகளும் எதுவித தடையுமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

மாகாண சபையைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு மட்டுமே முடியும். இதனால், மாகாண சபையை நீக்கி விட்டே ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி முறைமை மட்டும் நீக்கப்படுமானால், அது மதத்துக்கும் நாட்டுக்கும் ஆபத்தானது என்றார்.

Latest Offers