இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி! ஐ.நாவில் இன்று நடந்தவை என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

சவேந்திர சில்வாவிற்கு இலங்கை இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று சமர்ப்பித்தார். அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய அவர்,

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனிதாபிமான உரிமை மீறல்கள் ஆகியவற்றை பாரதூரமான முறையில் மீறியதாக குற்றம்சாட்டப்படும் சவேந்திர சில்வாவிற்கு இலங்கை இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.

இதேவேளை, வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிடியிலுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இந்த முக்கியமான நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மறுபுறுத்தில், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் குறைந்தபட்ச முன்னேற்றமே காணப்படுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்முறைகள், ஸ்திரமின்மை என்பன முக்கியமான விடயங்களாகும். இவை தொடர்பில் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இலங்கை மீது ஐ.நா.வின் வகிபாகம் தொடரவேண்டும். மரண தண்டனை தொடர்பான தீர்மானத்தை கைவிடவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவரின் இந்த உரைக்குப் பின்னர், பேசிய சர்வதேச அமைப்புக்கள், இலங்கை அரசாங்கம் எனது அலுவலகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதனை நான் மதிக்கின்றேன். நாம் தொடர்ந்து இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.

இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்பதுடன் கால அட்டவணையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச மன்னிப்பு சபை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆசிய மனித உரிமைகளுக்கான மையம் கனடா சட்டதரனிகளுக்கான உரிமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers