ஜனாதிபதியின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சரவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 30 இற்கும் அதிகமாக அதிகரித்துக் கொள்வதற்கு அரசாங்கம் ஜனாதிபதியின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தின் இணைக்கட்சிகள் இது தொடர்பில் நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்துள்ளன.

இந்த விடயத்தில் ஜனாதிபதி தமது கடும்போக்கை கைவிடுவார் என்று நம்புவதாக ஐக்கியக் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டுக்கும் ஐக்கியக் தேசியக் கட்சி ஆதரவாக செயற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers