ஐக்கிய தேசியக்கட்சியில் இணையும் நோக்கம் இல்லை

Report Print Ajith Ajith in அரசியல்

தாம், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையும் நோக்கம் இல்லையென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நொச்சியாகமையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

தமக்கு ஐக்கிய தேசியக்கட்சியுடன் தனிப்பட்ட உறவுகள் எதுவும் இல்லை.

2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் காரணமாகவே இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டன.

இந்தநிலையில் மீண்டும் மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டு வருவதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் பொறுத்திருந்தது பார்ப்போம் கொள்கையையே தாம் கொண்டிருப்பதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.