கோத்தபாய அச்சத்தில் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சம்பந்தமாக பதிலளிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலி - யக்கலமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டை மீட்டுக்கொடுத்த படையினரை காட்டிக்கொடுக்கக் கூடாது. இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.

இறுதியாக கிடைத்த உரிமையை கூட அரசாங்கம் பயன்படுத்தவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதன் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடு கேட்கும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம். மகிந்த ராஜபக்ச பெயரிடப் போவது ஜனாதிபதி வேட்பாளர் அல்ல நாட்டின் எதிர்கால ஜனாதிபதி.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் அவர் நிறுத்தப்பட உள்ளதை அறிந்து அரசாங்கம் அச்சத்தில் இருப்பதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers