ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக சதி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை ஒற்றையாட்சி நாடாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விஜேதாச ராஜபக்ச ஜெனிவா பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் தெளிவுப்படுத்தினார். அதற்கு பதிலளிக்க எவரும் இருக்கவில்லை.

ஜெனிவா மனித உரிமை பேரவை ஊடாக நாட்டின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சதித்திட்டத்தில் வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது உள்நாட்டு சதியாளர்களும் இருக்கின்றனர் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த படையினரின் மனநிலையில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்த மனித உரிமை பேரவையை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers