முழு நாடும் ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளரை ஐ.தே.கட்சி நிறுத்தும்

Report Print Steephen Steephen in அரசியல்

அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு ஏற்றுக்கொள்ளும், நாட்டைநேசிக்கும் சகல இன மக்களும் அங்கீகரிக்கும் தலைவர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும். அது பற்றி தற்போது பேசுவது பொருத்தமற்றது.

முக்கியமான கட்சி என்ற வகையில், அனைவரது ஆசியுடன் அந்த வேட்பாளர் நிறுத்தப்படுவார். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers