நாட்டின் சமூகத்தில் சட்டம், ஒழுங்கை ஏற்படுத்த மீண்டும் பாரிய புரட்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட யோசனை மூலம் இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து விலகியதை அடுத்து, பிரித்தானியாவுடன் மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு அமைய நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டால், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்காமல் பயங்கரவாதி ஒருவரை கூட கைது செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.
இதனால், இந்த சட்டமூலத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.