புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக கொண்டு வரப்படுகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமையவே புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் மூலம் எழுத்து உரிமை மற்றும் பேச்சுரிமைக்கு தடையேற்படும். புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டமானது இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர் தமிழர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டம்.

இந்த சட்டம் எதற்கு எதிராக அமுல்படுத்தப்படும் எதற்கு எதிராக அமுல்படுத்தப்படாது என்பது தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அரசியல் ரீதியான எதிரணியினரின் எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமையை இல்லாமல் செய்யும் வகையிலான ஏற்பாடுகள் 62 ஷரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி எந்த கூட்டத்தையும் நிறுத்த முடியும். எங்காவது ஒரு கூட்டத்தை நடத்தினால், அதனை பயங்கரவாத செயலாக கருத முடியாது.

இந்த சட்டம் அரசியல் எதிரிகளை அடக்கவும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பயங்கரவாதிகளை பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட உள்ள சட்டம். பயங்கரவாதத்தை தடுக்க கொண்டு வரப்படும் சட்டம் அல்ல.

மறுபுறம் இந்த சட்டம் மூலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். கூட்டங்கள், பேரணிகள் நிறுத்த முடியும். இது நேர்மையாக செய்யப்பட்டதல்ல.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடிய வாய்ப்புகள் அதிகம். இல்லாவிட்டால், இப்படியான விடயங்களை பயங்கரவாத சட்டம் ஒன்றுக்குள் உள்ளடக்க வேண்டியதில்லை.

இதன் மூலம் பேசுபவரின் பேச்சுரிமை மட்டுமல்ல தகவல்களை அறிந்துக்கொள்ளும் மக்களுக்கு இருக்கும் உரிமையும் இல்லாமல் போகும் எனவும் மனோஹர டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers