சிறுபான்மை மக்களுக்கு நானே சிறந்த தீர்வு- கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

சிறுபான்மை மக்கள் அவர்களின் பிரச்சினைகளில் இருந்து மீள தானே சிறந்த தீர்வு என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாராஹென்பிட்டியில் விகாரை ஒன்றில் நேற்று நடைபெற்ற வைபவத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற முடியுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கோத்தபாய, சிறுபான்மை மக்களின் ஆதரவை தன்னால் கட்டாயம் பெற முடியும் எனவும் அவர்களின் பிரச்சினைக்கு மட்டுமல்ல சகலரது பிரச்சினைகளுக்கும் இருக்கும் ஒரே தீர்வு தான் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை போன்ற கடந்த காலம் மறந்து போன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மக்களுக்கு அந்த நோய் இல்லை எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

வடக்கில் தமிழ் மக்களின் பிணங்களை குவித்தே கோத்தபாயவினர் அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கினர். மிக் விமானங்கள் மூலம் வடக்கில் மக்கள் மீது டொன் கணக்கான எடைகளை குண்டுகளை பொழிந்தனர்.

மிக் விமான கொள்வனவில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து, போருக்கு பின்னரும் வடக்கு மக்களை இராணுவ சப்பாத்துக்களில் மிதித்து வைத்திருந்தனர்.

தெற்கில் முஸ்லிம் மக்களுக்கு இல்லாத பிரச்சினை உருவாக்கி பொதுபல சேனா மூலம் வழங்கிய தீர்வை மக்கள் நன்கு நினைவில் வைத்துள்ளனர். கல்வீசி, தீ வைத்து, அளுத்கமவில் வழங்கிய வெறித்தனமான தீர்மானத்தை அந்த மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

சர்வதேசத்திற்கு மத்தியில் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய கோத்தபாய, சிறுபான்மை மக்களின் ஒரே இரட்சகர் என தன்னை வெளிக்காட்ட முயற்சிப்பது கேலிக்குரியது.

கோத்தபாய போன்றவர்களிடம் தீர்வை எதிர்பார்க்கும் சிறுபான்மை மக்கள் இருப்பார்கள் என்றால் அவர்களின் நிலைமை கவலைக்கிடம்தான் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers