ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ள மாவை

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தால் இயக்கப்படும் தல்செவன விடுதியை சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் பேச்சு நடத்தப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடரப்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளோம்.

வலி. வடக்கு காங்கேசன்துறை தலசெவன இராணுவ விடுதியை மையமாகக்கொண்டு அவ்விடுதியைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவ நிர்வாகத்தினது சுற்றுலாப் பயன்பாட்டிற்காக எடுத்துள்ள சுவீகரிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சுடன் பேச்சு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers