மகிந்தவை தோற்கடித்தது போல் இம்முறை நிறுத்தும் வேட்பாளரையும் தோற்கடிப்போம்!

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சத வீத வாக்குகளை பெற தமது கட்சி இடமளிக்காது எனவும் அதற்கான தீர்மானகரமான துரும்புச் சீட்டு தமது கட்சியிடமே இருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த விதத்தில் இம்முறை போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரையும் தோற்கடிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 71 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர் எவருக்கும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை. நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மக்கள் விடுதலை முன்னணியிடம் மட்டுமே இருக்கின்றது.

எமது கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், 5 ஆண்டுகளில் நாட்டை கட்டியெழுப்புவோம்” என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers