சுமந்திரனும் சிறீதரனும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளனர்: தினேஷ் குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் அரசியல் அமைப்பினை மீறுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெனீவா சென்று இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.

இது தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்குலக நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சாகவே செயற்பட்டு வருகின்றது.

உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டது கிடையாது என்றும் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers