இலங்கை தொடர்பில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்ட ஜெனிவா யோசனை!

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40ஆம் அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான தீர்மானமொன்று சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட சில நாடுகளினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers