இலங்கையின் ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்திய ஐ.நாவின் ஆணையாளர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் வெளியிட்டிருந்த அறிக்கையும், நிலைப்பாடும், இலங்கையின் ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்திருந்ததென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா ஒருங்கிணைப்பாளர் மு.சுகிந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமீபத்திய காலங்களில் ஐ.நா மனித உரிமைச்சபையின் ஒவ்வொரு ஆணையாளர்களும், இலங்கை தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்பது இலங்கையின் பொறுப்பற்ற நடத்தைகளை சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த வேண்டும். ஐ.நா பாதுகாப்பு சபைக்கு இலங்கை விவகாரத்தினை கொண்டு செல்ல வேண்டும் என்ற விடயங்கள் சிவில் சமூகத்தின் ஒரு தரப்பால் முன்வைக்கப்படுகின்றது.

தனது அறிக்கையின் 51 ஆவது குறிப்பாக பதிவிடப்பட்டுள்ளமையானது, எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட 106 தமிழ் அமைப்புக்களின் கோரிக்கை மட்டுமல்ல பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு கருத்துருவாக்கமாக வலுப்பெற்று வருகின்றது.

சபையின் அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும் தமது நலன்களின் அடிப்படையில் இலங்கை தொடர்பில் நிலைப்பாடுகளை கொண்டிருப்பதனை அவர்களது நிலைப்பாடுகள் ஊடாக தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers