பலாலி விமான நிலையம் தொடர்பில் ரணிலின் அழைப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

கொழும்பில் நடந்த வணிக மாநாட்டில் பேசிய தம்மிக பெரேரா என்பவர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்நிலையில் அவரின் கருத்துக்குப் பதில் கருத்துரைத்த பிரதமர் ரணில்.

யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்றார்.

இதே நிகழ்வில் பேசிய துருக்கி தூதுவர், ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்திருப்பதன் மூலமாக வடக்கின் விமான சேவைக்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.

Latest Offers