இலங்கையிடம் பிரித்தானியா விடுத்துள்ள கோரிக்கை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள், போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரித்தானியா கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

இந்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை குறித்த 40/1 என்ற பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்போது உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி,

“இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும்.

இதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற வேண்டும்“ என்று பேசினார்.

முன்னதாக நேற்றைய தினம் அவையில் பேசிய பிரித்தானியப் பிரதிநிதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேபோல, எமது பார்வையில் 30/1 தீர்மானம், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு முக்கியமான விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது.

அனைத்து தரப்புகளினதும் ஒருங்கிணைந்த முயற்சியாக அதனை அடைய முடியும். இந்த இலக்கை அடைவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிப்போம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers