யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும்

Report Print Kanmani in அரசியல்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நிதியுதவியை வழங்கி கைத்தொழில் ரீதியாக வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசங்களில் காணப்படும் வளங்களை கண்டறிந்து இளைஞர்,யுவதிகள்,மாற்றுத்திறனாளிகள்,விசேட தேவையுடையவர்கள் என்ற வகையிலும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்ற வகையிலும் பலர் காணப்படுகின்றனர்.

பிரதேச செயலகங்களின் ஊடாக ஆரம்ப கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக கிராமங்களில் காணப்படும் வறுமை,தொழிலின்மை,கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் மாற்றுத்திறனாளிகள் போன்றவற்றினை வலுவூட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபட்டு வலுவடையக்கூடிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த இந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.

இந்த அரசின் ஊடாக வறுமையை போக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.அவர்களையும் நாட்டின் அபிவிருத்தி பங்காளர்களாக மாற்றி பிரதேசத்தினையும்,நாட்டையும் அபிவிருத்தி செய்யக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

பொருத்தமானவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்க வேண்டும்.இதன் மூலம் ஊழல் மோசடிகளை தடுக்க முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளின் அமைப்புக்கள் காணப்படுகின்றது.இவர்களுக்கான வாய்ப்பு, வசதிகளை இனங்கண்டு உரிய விதத்தில் நிதியை வழங்குவதன் மூலம் ஒரு காலை இழந்து இருந்தாலும் வாழ்க்கையில் சுயமாக செயற்பட ஒரு வாய்ப்பு,வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers