அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து தொடர்பில் விரைவில் ஜனாதிபதி மக்களுக்கு தெளிவுப்படுத்துவார்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்துவது குறித்த ஆவணங்களை இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என வெளியாகும் செய்திகள் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் விரைவில் ஜனாதிபதி நாட்டுக்கு மக்களுக்கு தெளிவுப்படுத்துவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கைத்தொழில், சமூக வலுவூட்டல் மற்றும் விஷேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஆகிய அமைச்சுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, பாதீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான எழுத்துமூல மற்றும் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரத்தியேகமாக ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

அது தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் இருந்து விரைவில் நாட்டு மக்களுக்கும் சிங்கப்பூருக்கும் தெளிவுப்படுத்தப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

Latest Offers