இலங்கையில் குறுக்கிடாதீர்கள்! அச்சுறுத்தவும் வேண்டாம்; தினேஸ் குணவர்தன வேண்டுகோள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை போன்ற நாடுகளின் பிரச்சினைகளில் எவரும் குறுக்கிட வேண்டாம் அச்சுறுத்தவும் வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் கூட்டத் தொடர்பில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நிலையில்லாத வெளிநாட்டு கொள்கையினால் பல உலக நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தி உள்ளன.

ரணில் தலைமையிலான அரசாங்கம் கடைபிடிக்கும் வெளிநாட்டு கொள்கைகளினால், நாடு பாரிய சாவால்களுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே இலங்கை தொடர்பான யோசனையை முன்வைத்த அமெரிக்கா இப்போது அந்த பேரவையில் அங்கம் வகிப்பது இல்லை.

முன்பு எமக்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகள் ரணிலின் வெளிநாட்டு கொள்கையினால் தூரம் சென்றுள்ளன. வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு விசாரணைகளை நடத்த முடியாது.

இந்த நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இருந்து முற்றாக விலக வேண்டும். இலங்கை போன்ற நாடுகளின் பிரச்சினைகளில் எவரும் குறுக்கிட வேண்டாம் அச்சுறுத்தவும் வேண்டாம்.

நேற்று இலங்கை பிரதிநிதிகள் செயற்பட்டவிதம் வரவேற்கதக்கது என்றாலும் அது போதாது. வெளிவிவகார அமைச்சு இலங்கையின் கடமைகளை நிறைவேற்றுவது இல்லை. இதனை ஜனாதிபதியும் அறிந்துள்ளார் என்றார்.

Latest Offers