ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழினத்தின் மீதான போர்குற்றங்களுக்கும், இனப் படுகொலைக்கும் இலங்கைக்கு பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமோ அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்பாயங்களே பொருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுதான் தமது நிலைப்பாடும் எதிர்பார்பும், அதனை நோக்கிய தமது செயற்பாடு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் நீதிக்கான செயற்வழிப்பாதையும் ஜெனிவா மட்டுமல்ல, அதற்கும் அப்பாலும் நமக்கான வாய்ப்புக்கள் அனைத்துலக அரங்கில் இருக்கின்றது .

நடந்துள்ள ஐ.நாவின் 40வது கூட்டத் தொடர் தமிழர் தரப்புக்களை ஒற்றைப்புள்ளியில் இணைத்துள்ளது.

அனைத்துலக குற்றவியில் நீதிமன்றம் நோக்கிய செயல்முனைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றுபட்டிருப்பது ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான செயல்முனைப்பில் வலுவான ஒன்றாக எதிர்காலத்தில் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers