வில்பத்து காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டு! நாமல்

Report Print Gokulan Gokulan in அரசியல்

வில்பத்து வனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரியளவிலான காடழிப்பு செயற்பாடு குறித்து, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காடழிப்பு இடம்பெறாமல் தடுப்பதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டு எனவும் நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இக் காடழிப்பு செயற்பாடு இடம்பெற்று பாரிய அழிவு இடம்பெறுவதற்கு முன்னர், ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட வேண்டும்.

இப் பிரச்சினை சூழல் பிரச்சினையாக மாத்திரமன்றி, ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers