இலங்கையில் இந்தியாவின் முதலீடுகளை குறுகிய மனப்பான்மையில் நோக்கவில்லை: சீனா

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் முதலீடுகளை தமது நாடு குறுகிய மனப்பான்மையில் பார்க்கவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் கெங் ஷங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் எண்ணெய் சுத்தரிப்பு பணிகளின் நிமித்தம் ஓமானிய நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து 3.85 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் கூட்டு நிர்மாணம் ஒன்றை மேற்கொள்ள போவதாக பிரதியமைச்சர் நளின் பண்டார அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நேற்று சீனாவின் வெளியுறவு பேச்சாளரிடம் அந்த நாட்டின் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் கெங் ஷங், இலங்கையில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களின் ஊடாக உரிய நன்மைகள் கிடைத்துள்ளன.

இதனால் இந்திய முதலீடுகளை சீனா குறுகிய மனப்பான்மையுடன் நோக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers