புலிகளின் பெருந்தொகை பணத்தை பதுக்கி வைத்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதி! அம்பலப்படுத்தும் பெண்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளன, கொழும்பில் தமது தேவைக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்திய காணிகள் இப்போது கோத்தபாய ராஜபக்ச வசம் போய்விட்டன என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது உங்களது கணவர் உயிருடன் இருக்கின்றார் என நீங்கள் நம்புகின்றீர்களா என செய்தியாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது,

எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் அலைந்து திரிகின்றேன். சரணடைந்தவர்களை யுத்தத்துக்குப் பின்னர் கொல்ல வேண்டிய தேவை கிடையாது.

யுத்தம் முடிந்த பிறகு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் 04ஆம் மாடிக்கு எழிலன் கொண்டு செல்லப்பட்டமைக்கான சாட்சியங்களும் உள்ளன.

பத்திரிகையிலும், அது தொடர்பில் அப்போது செய்தி வெளியாகி இருந்தது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் உள்ளதாகவும், கொழும்பில் தமது தேவைக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்திய காணிகள், இப்போது கோத்தபாய ராஜபக்ஷ வசம் போய்விட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கூட புலிகளின் கப்பல்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் கோத்தபாயவிடம் கையளித்துள்ளார் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

You my like this video


Latest Offers