தந்திரோபாயமாக கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்வோம்: திலங்க சுமதிபால

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின், தமது கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தந்திரோபாயமாக மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுமதிபால இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

20 விடயங்கள் தொடர்பாக முன்வைத்த யோசனைகளை ஏனைய கட்சிகளுடன் பேசி கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்.

இரண்டு கட்சிகளுக்கு இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை ஏப்ரல் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தற்போதைய அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இதனால், மக்கள் புதிய அரசாங்கத்தையும் புதிய நாட்டையும் எதிர்பார்த்துள்ளனர்.

புதிய நாடாக நாட்டை மாற்றியமைக்க தேவையான பின்னணியை உருவாக்கும் பொறுப்பு உள்ளது. இரண்டு கைகளையும் நீட்டி ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

பொதுஜன பெரமுனவுடன் மூழ்கி போன அனைவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணையுமாறு அழைப்பதாகவும் சுமதிபால மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers