கோத்தபாயவிற்கு தமிழர்களின் ஆதரவு உண்டா? ரஞ்சன் என்ன கூறுகின்றார்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவால் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது, தமிழர்கள் அவருக்கு ஆதரவினை வழங்க மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது அணியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வாறான வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் நிச்சயமாக வெற்றிக்கொள்ள போவதில்லை.

தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் விருப்பினை பெற்றுக்கொள்ள கூடிய வேட்பாளரையே நாங்கள் இம்முறை வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers