அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் பாக்கியசோதி சரவணமுத்து

Report Print Steephen Steephen in அரசியல்

மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாதது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அத்துடன் இதன் ஊடாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் மக்கள் இவ்வாறான ஒன்றை எதிர்பார்க்கவில்லை. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்துள்ளதுடன் அவை ஆளுநர்களின் கீழ் இயங்கி வருகின்றன. ஏனைய மூன்று மாகாணங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளது.

Latest Offers